பிற்கால நீதிநூல்கள் தமிழ்நிலம் தொன்மையானது. தமிழ் மக்கள் நிலத்தின் மூத்த குடிகளாவர். அவர்களின் வாழ்வு நனிநாகரிகம் மிக்கது.தமிழ் இலக்கியம் உலகில் மிகச் சிறந்தது.மூத்த மொழி மட்டும் இதன் பெருமையல்ல,இந்திய மொழிகளில் முதன்மையானதும் வளம் பல பெற்று இன்றும் வாழ்வதும் இதன் தனி சிறப்பாகும். சங்ககாலம் தொடங்கி கண்ணதாசன் காலம் வரை , தமிழ் இலக்கியத்தில் நீதி கருத்துகள் கூறப்பெற்றுள்ளன. மனித குல மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் அறக்கருத்துகள் சங்கச் சான்றோர்களால் தெளிவாக கூறப்பெற்றுள்ளன. பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகை செய்யத்தக்கது மற்றும் செய்யத்தகாதது என மக்கள் நல்வாழ்வுக்கு ஏற்ற நூற்றுக்கு மேற்பட்ட அறங்களை வகுத்தும் ...